மத்திய பிரதேசத்தில் பேட்டுல் மாவட்டத்தில் சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் பேட்டுல் மாவட்டத்தில் இன்று காலை கார் மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து குறித்து பேட்டுல் போலீஸ் அதிகாரி கூறுகையில் ஜல்லார் காவல் நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளதாகவும் விபத்தில் 11 பேர் பலி மற்றும் காயமடைந்த ஒருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்த பிரதமர் மோடி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது வருத்தத்தையும், காயமடைந்தவர் விரைவில் குணமடைய ப்ரார்த்திப்பதாகவும் கூறினார். மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு 50,000 ரூபாயும் அறிவித்தார்.
unknown node