மகாராஷ்டிரா பேருந்து விபத்து..! பிரதமர் மற்றும் முதல்வர் ஷிண்டே நிதியுதவி..!

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

MaharashtraBusAccident

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் புல்தானாவில் உள்ள சம்ருதி மகா மார்க் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று,  நள்ளிரவு 2 மணியளவில் திடீரென்று டயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், பேருந்தில் உள்ள டீசல் டேங்க் திடீரென்று தீப்பற்றி எரிந்த நிலையில், பேருந்து முழுவதும் தீ பரவி மூன்று குழந்தைகள் உட்பட பேருந்தில் பயணத்தை 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

unknown node

மேலும், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த பயங்கர விபத்தால் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

unknown node