மஹாராஷ்டிராவில் 24 பேர் உயிரிழப்பு .! கொரோனா பாதிப்பிலும் முதலிடம்.!

கொரோனா வைரஸ் ஐரோப்பா நாடுகளிடம் தனது கோரமுகத்தை அதிகம் காட்டிவருகிறது. அதேபோல தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.கொரோனாவால்

கொரோனா வைரஸ் ஐரோப்பா நாடுகளிடம் தனது கோரமுகத்தை அதிகம் காட்டிவருகிறது. அதேபோல தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இன்று காலை வரை 2092 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 3072 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம்  பாதிக்கப்பட்டோர்  மற்றும் உயிரிழந்தோர் என்ற மாநிலம் என்றால் அது மஹாராஷ்டிரா தான், இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 490 பேரும் , உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.

கொரோனாவால் இந்த மாநிலம் போல வேறு இந்த மாநிலமும் அதிகம் உயிரிழப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.