ஜன.1 முதல் மகேந்திரா & மகேந்திரா டிராக்டர்களின் விலை அதிகரிப்பு!

Mahindra & Mahindra has said that the price hike is necessary due to the increase in prices of goods and various input costs.

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு உள்ளீட்டு  செலவு காரணமாக விலை உயர்வு அவசியமாக உள்ளது என மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார சிக்கல்கள் காரணமாக பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், மஹிந்திரா & மஹிந்திரா தனது டிராக்டரின் விலையை  அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இந்தத் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜனவரி 1, 2021 முதல் டிராக்டர்களில் மாடல்களின்  வகையை பொறுத்து விலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு உள்ளீட்டு  செலவு காரணமாக விலை உயர்வு அவசியமாக உள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. வெவ்வேறு மாடலின் விலை அதிகரிப்பு குறித்து விவரங்கள் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. செலவு அதிகரிப்பு தாக்கத்தை ஓரளவிற்கு ஈடுசெய்யும் பொருட்டு அடுத்த மாதம் முதல் மஹிந்திரா & மஹிந்திரா தனது முழு அளவிலான பயணிகள் மற்றும் வணிக வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.