சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு பேரணிக்கு சென்ற மம்தா பானர்ஜி!

The Trinamool Congress is holding a rally from Gandhimurthy to Hazra. Mamta Banerjee, who is in a wheelchair, attended the rally.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திமுர்த்தி பகுதியில் இருந்து ஹஸ்ரா பகுதி வரை பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.

மேற்குவங்க சட்டசபை தேர்தல், மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி, கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

அவரை நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக பாஜக அறிவித்தது. அதனைதொடர்ந்து மம்தா, அதே தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்ச் சார்பாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே நேரடி போட்டி நிலவிவருகிறது. இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் களம், சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மேலும் மம்தா பானர்ஜி, நந்திகிராம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு பின் காரை நோக்கி செல்லும்போது அவரை சிலர் தள்ளிவிட்டதால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திமுர்த்தி பகுதியில் இருந்து ஹஸ்ரா பகுதி வரை பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். மேலும் மம்தா, “சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரத்தை மேற்கொள்வேன்” என மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.