கர்நாடகாவில் சமூகவலைத்தளம் மூலம் முத்தலாக் கொடுத்த நபர் கைது.
கர்நாடக மாநிலம், மங்களூர் மாவட்டத்தில் ஷிர்வா பகுதியில் வசித்து வருபவர் சலீம். இவருக்கும், ஸ்வப்னாஸ் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில், இவர் தனது குடும்பத்துடன் சவுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சவுதியில் இருந்து குழந்தையையும், மனைவியையும் விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பினார். இதனையடுத்து, இந்தியா வந்த இவர், சமூகவலைத்தளம் மூலம் மனைவிக்கு முத்தலாக் கூறியுள்ளார். மேலும், அவர் வேறு பெண்ணுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, ஸ்வப்னாஸ், சவுதியில் இருந்து இமேயில் மூலம், கர்ணாகாவில் உள்ள மங்களூர் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சலீம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.