மணிப்பூர் விவகாரம்: இரு அவைகளிலும் பிரதமர் பேச வேண்டும் – ஜெய்ராம் ரமேஷ்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிரதமர் பேச வேண்டும் என்று இந்தியா கூட்டணி கோரிக்கை.

Jairam Ramesh

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிரதமர் பேச வேண்டும் என்று இந்தியா கூட்டணி கோரிக்கை.

பிரதமர் மோடி இரு அவைகளில் பேசிய பிறகே நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என காங்கிரேசின் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூரில் மே 3 முதல் நடந்த பயங்கரமான சம்பவங்கள் மற்றும் சோகமான நிலைமை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும்.

அதன் பிறகு விவாதம் நடைபெறும் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த 26 கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுவிக்கப்படுவதாக கூறியுள்ளார். மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூரில் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.  இதுதொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்  சந்திப்பில் பேசிய பிரதமர், முதல்முறையாக மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மவுனம் கலைத்தார்.

இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் பரமர் மோடி பேச வேண்டும் என்றும் இதன் பிறகே விவாதம் நடைபெறும் எனவும் இந்தியா கூட்டணி சார்பாக ஜெய்ராம் கூறியுள்ளார்.

unknown node