இரண்டாவது முறையாக " மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ள மோடி.!

இரண்டாவது முறையாக பிரதமர் மோடி இன்று "மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.

இரண்டாவது முறையாக பிரதமர் மோடி இன்று “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.

பிரதர் மோடி முதல் முறையாக பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்ற  “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியை தொடங்கப்பட்டது. இதையெடுத்து, அதே ஆண்டு விஜயதசமி அன்று தனது முதல் உரையாற்றினார்.

பின்னர் மீண்டும் 2019-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து  “மன் கி பாத்” நிகழ்ச்சியை  கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி தொடங்கினார். இதையெடுத்து, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மோடி  மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், நாடுமுழுவதும் ஊடரங்கு அமலில் உள்ள நிலையில்,  இன்று  இரண்டாவது முறையாக பிரதமர் மோடி”மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.

கடந்த மாதம் 29-ம்  உரையாற்றிய  போது ,  நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.