மார்ச் 31 ஆம் தேதிக்குள் குடிமக்கள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து நிரந்தர கணக்கு எண்கள் (பான்) வைத்திருப்பவர்களும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்கள் பான் எண்ணை, ஆதாருடன் இணைக்க வேண்டும், இல்லையெனில் ஏப்ரல் 1 முதல் அது ‘செயல்படாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. அனைத்து பான் எண்களும் ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
இதனடிப்படையில் ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்கள் ஏப்ரல்-க்கு பிறகு செயல்படாது வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. செயல்படாத PAN-ஐப் பயன்படுத்தி, ஒரு நபர் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாது, நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது, நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது. மேலும் செயலில் இல்லாத பான் எண்ணால் வருமான வரியும் அதிக விகிதத்தில் கழிக்கப்படும். இதனால் விரைவில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.