மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முதுநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 21-ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 849 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை 2.06,301 பேர் எழுதினர். இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வு முடிவுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அவர்கள் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். 10 நாட்களிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்கு தேசிய தேர்வு வாரியத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகள்,natboard.edu.inதளத்தில் வெளியீடபட்டுள்ளது.
unknown node