மருத்துவ மேற்படிப்பு – ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு உறுதி!

The Supreme Court has confirmed 27 per cent reservation for OBCs in medical studies.

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடரான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்கப்படும் என்றும்  உயர்சாதி ஏழையினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக மார்ச் 3வது வாரம் விரிவான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27%, EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.