மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிலவரம்.
சட்டசபை தேர்தல்:
unknown nodeவடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு திரிபுரா, மேகாலயம், நாகலாந்து, கர்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், வடகிழக்கு மாநிலமான திரிபுரா மாநிலத்தில் கடந்த 12ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
பதவிக்காலம் முடிவு:
unknown nodeஇதையடுத்து, மேகாலயா, நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகள், மற்ற சிறிய கட்சிகளும் நேற்று முன்தினம் வரை பிரச்சாரம் செய்தனர்.
வாக்குப்பதிவு நிலவரம்:
unknown nodeமேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பார்த்தீவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், மேகாலயாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் காலை 9 மணி நிலவரப்படி, 12.06% வாக்குகளும், நாகாலாந்தில் 17.17% வாக்குகளும் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தல்:
unknown nodeஇதுபோன்று, இடைத்தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம் சாகர்திகி தொகுதியில் 13.37% வாக்குகளும், ஜார்கண்ட் மாநிலம் ராம்நகர் தொகுதியில் 15.19% வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது.