உருகும் பனிப்பாறைகள் முதல் மேக வெடிப்புகள் வரை – காஷ்மீரை பாதிக்கும்  காலநிலை மாற்றம்!!

காஷ்மீர் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் அசாதாரண வேகத்தில் உருகுவதால் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. காடழிப்பு மற்றும் வனச் சிதைவு புவி வெப்பமடைதலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

வட இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் பகுதி முழுவதும், அதிகரித்து வரும் வெப்பநிலையால், பனிப்பாறைகள் உருகுதல் தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிட்டது. அதே நேரத்தில் அடிக்கடி மழைப்பொழிவு, ஆலங்கட்டி மழை மற்றும் வெள்ளப்பெருக்கும்  அதிகரித்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக, குறிப்பாக ஜூலை மாதத்தில், காஷ்மீர் பகுதியில் அதிக மழைப்பொழிவு பதிவாகி, பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இது விவசாய வயல்களுக்கும் பிற சொத்துக்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியது. ஜூலை மாதம், புனித அமர்நாத் குகைக்கு அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட மேக வெடிப்பில் குறைந்தது 15 அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.

காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) அறிக்கையின்படி, புவி வெப்பமடைதல் ஆசியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் ஆசிய நாடுகளில் இந்தியா அதிக ஆபத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்