பஞ்சாபில் மிக்-21 ரக போர் விமானம் விழுந்து விபத்து – விமானி உயிரிழப்பு!

Abhinav, the pilot of the Indian Air Force MiG-21 fighter jet that crashed in Punjab, has died.

பஞ்சாபில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் – 21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், அந்த விமானத்தின் விமானி அபினவ் என்பவர்  உயிரிழந்துள்ளார்.

விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வழக்கமான அன்றாட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது விழுந்து விபத்து ஏற்படுவது சில சமயங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மேகா அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளது. இந்த விமானம் ராஜஸ்தானில் உள்ள கங்கா நகர் மாவட்டத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானி அபினவ் சவுத்ரி அவர்கள் உயிரிழந்துள்ளார்.

இந்த ஆண்டில் மிக்-21 ரக போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது இத்துடன்  மூன்றாவது முறை. ஏற்கனவே மார்ச் மாதம் ஒருமுறை விழுந்த பொழுது குரூப் கேப்டன் உயிரிழந்தார். அதுபோல ஜனவரி மாதம் ராஜஸ்தானில் விமான விபத்து ஏற்பட்டது, ஆனால் விமானி பாதுகாப்பாக உயிர் தப்பினார். இந்நிலையில் தற்போது நடந்துள்ள விமான விபத்தில் உயிரிழந்த விமானி அபினவ் அவர்களது குடும்பத்திற்கு விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவர்களது குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும் ஆறுதல் கூறியுள்ளது.