ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆகப் பதிவு.!

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில், இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்ராவிற்கு கிழக்கே 97 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படும் முன்பே அதை கணித்து கூறிய ஆராய்ச்சியாளர் இந்தியாவிலும் இதே போன்று மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவில் இந்த அந்நிலநடுக்கம் ஏற்பட்டுளள்து குறிப்பிடத்தக்கது. சிக்கிம் மாநிலத்தில் கடந்த முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால் இருமுறையும் நிலநடுக்கத்தின் தாக்கம் எதுவும் பெரிதாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது.