அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தற்போது இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது முகநூல் பக்கத்தில், தஞ்சை தரணியின் மண்ணின் மைந்தராக சட்டமன்றத்தில் டெல்டா விவசாயிகளின் குரலாக ஓங்கி ஒலித்து தமிழக வேளாண்மை துறை அமைச்சராக உயர்ந்த துரைக்கண்ணு அவர்கள் மறைவு செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.