ஹுப்பள்ளியில் தேசிய இளைஞர் விழாவை, தொடங்கி வைக்கிறார் மோடி.!

பிரதமர் மோடி, தேசிய இளைஞர் விழாவை ஹுப்பள்ளியில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி, தேசிய இளைஞர் விழாவை ஹுப்பள்ளியில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி-12, தேசிய இளைஞர் தினமாக ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12ஆம் தேதி, கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் தேசிய இளைஞர் விழா நடைபெறுகிறது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

விவேகானந்தரின் பிறந்தநாளில் கொண்டாடப்படும் இந்த இளைஞர் தினம், தேசிய அளவில் திறமையான இளைஞர்களை அடையாளப்படுத்தி வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகக் கொண்டது. இந்த ஆண்டு, இளைஞர் தின விழாவின் முக்கியமாக (தீம்) “விக்சித் யுவ-விக்சித் பாரத்” என்பதாகும்.