பணமோசடி வழக்கு..! முன்னாள் மத்திய நிதியமைச்சர் மனைவியின் சொத்துக்கள் முடக்கம்..!

சாரதா குழும பணமோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மனைவியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.

சாரதா குழும பணமோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மனைவியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மற்றும் பலரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள அசாம் மற்றும் ஒடிசாவில் சாரதா குழுமம், சிட் ஃபண்ட் ஒன்றை நளினி சிதம்பரம் நடத்தியதாக கூறப்படுகிறது.

unknown node

இந்த நிறுவனம் திரட்டிய மொத்தப் பணத்தின் அளவு சுமார் ரூ. 2,459 கோடியாகும். இதில் வட்டித் தொகையைத் தவிர்த்து இன்று வரை கிட்டத்தட்ட ரூ.1,983 கோடி டெபாசிட்தாரர்களுக்குச் செலுத்தப்படாமல் உள்ளது. இந்த குழுமத்தின் பண மோசடி தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ், பயனாளர்களின் ரூ.3.30 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

unknown node

இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ தேபேந்திரநாத் பிஸ்வாஸ் மற்றும் அசாமின் மறைந்த முன்னாள் அமைச்சர் அஞ்சன் தத்தாக்குச் சொந்தமான நிறுவனமான அனுபூதி பிரிண்டர்ஸ் மற்றும் பப்ளிகேஷன்ஸ் போன்ற பயனாளர்களின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த பணமோசடி வழக்கில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது.