வெளிநாட்டுப் பயணிகளை கடித்த குரங்குகள் ..!

தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க வந்த இரண்டு வெளிநாட்டுப் பயணிகளை குரங்குகள் கடித்துக் குதறின.

தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க வந்த இரண்டு வெளிநாட்டுப் பயணிகளை குரங்குகள் கடித்துக் குதறின.

unknown node

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

unknown node

அப்போது வெளிநாட்டுப் பயணிகள் இருவர் மீது பாய்ந்த குரங்குகள் அவர்களை கடிக்கத் தொடங்கின. அங்கிருந்த அனைவரும் சேர்ந்து குரங்குகளை விரட்டி அடித்து பயணிகளை மீட்டனர்.

குரங்குகள் கடித்ததில் பயணிகள் இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.