பத்து ஆண்டுகளில் அதிக சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் பெங்களூர் இரண்டாவது இடத்தில் உள்ளது.
வருடாவருடம் சாலையில் வாகனங்கள் அதிகரிப்பது போல சாலை விபத்துக்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
2022 ஆம் ஆண்டில், கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த சாலை விபத்தில் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையில் பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது என்று பெங்களூர் போக்குவரத்து காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.
இந்த தகவலின்படி, 2022 இல் பெங்களூருவில் 3,827 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, இதில் 3,235 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 777 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பெங்களூருவில் 2016ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 793 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகள் :
2018 : மொத்த விபத்துகள் : 4,611 பேர் பலி: 684 பேர் காயமடைந்தவர்கள் : 686
2019 : மொத்த விபத்துகள் : 4,684 பேர் பலி: 766 பேர் காயமடைந்தவர்கள் : 4,250
2020 : மொத்த விபத்துகள் : 3,236 பேர் பலி: 647 பேர் காயமடைந்தவர்கள் : 2,760
2021 : மொத்த விபத்துகள் : 3,213 பேர் பலி: 651 பேர் காயமடைந்தவர்கள் : 2,820
2022 : மொத்த விபத்துகள் : 3,827 பேர் பலி: 777 பேர் காயமடைந்தவர்கள் : 3,235