டெல்லியில் தாய்-மகள் வன்கொடுமை.. வீடியோ பரப்பியவர், வன்கொடுமை செய்தவர்கள் கைது..!

A mother-daughter who was living on the streets of Delhi was allegedly raped by two drunken men on the night of December 29 and 30.

டெல்லியில் தெருக்களில் வசித்து வந்த தாய்-மகளை  குடிபோதையில் வந்த இரண்டு பேர் கடந்த டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளின் இரவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் உதவி செய்வதற்குப் பதிலாக சம்பவத்தை வீடியோவை பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார்.

இந்த வைரல் வீடியோவை பார்த்த போலீசார்நடத்திய விசாரணையில், அந்த பெண்ணிற்கு 35 வயதும், அவரது மகளும் சுமார் 18 வயது  எனவும், ஊனமுற்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இரண்டு பேரில் ஒருவர் அந்த பெண்ணை செங்கல் மூலம் அடித்து கொலை செய்வதாக மிரட்டினார்.

இதைத்தொடர்ந்து, நேற்று போலீசார் குடிபோதையில் இருந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். அதில் ஒருவர் வஜீர்பூரில் வசிக்கும் அமித் , மற்றோருவர்  ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் சோனு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தை படமாக்கிய வீடியோவை பரப்பியவரும் கைது செய்யப்பட்டார்.