மும்பை:பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் உள்ள டார்டியோவில் உள்ள 20 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனை அருகே அமைந்துள்ள 20 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 18 வது மாடியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அதன்படி,காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.இதனையடுத்து,தீ அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில்,இந்த தீ விபத்தினால் 2 பேர் படுகாயம் அடைந்து அவர்கள் பாட்டியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்,கட்டிடத்திற்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா? என்று தேடும் பணியிலும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…