நாரதா முறைகேடு...! 4 திரிணாமுல் காங்கிரஸாருக்கு ஜாமீன்...!

A Kolkata court has granted interim bail to four Trinamool Congress leaders in connection with the Narada scam.

நாரதா முறைகேடு விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கடந்த 2014ம் ஆண்டில், மேற்குவங்காளத்தில் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள் சிலர் லஞ்சம் பெற்றதை நாரதா டி.வி. சேனல் அம்பலப்படுத்தியது. அவர்கள் லஞ்சம் பெற்ற வீடியோவை கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா சேனல் வெளியிட்டது.

இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ அனுமதி கோரியுள்ளது. சி.பி.ஐ. அமைப்பு குற்றப்பத்திரிகையை இறுதி செய்து, கவர்னர் அனுமதியுடன் அவர்கள் 4 பேரையும் கைது செய்தது. இதனையடுத்து, அவர்களுக்கு சி.பி.ஐ ஜாமீன் அளித்தது.  ஆனால், சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டின் பேரில், ஜாமீன் உத்தரவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதனால் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சி.பி.ஐ. 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. கடந்த வாரம், கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் தலைமையிலான அமர்வு அந்த மனுவை விசாரிக்க இருந்தது. ஆனால், விசாரணையை ஒருநாள் தள்ளி வைத்தது.

இதனையடுத்து, இன்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், தலா ரூ.2 லட்சம் தனிநபர் பிணை தொகையை, 4 பேரும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.