இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த நரேந்திர மோடி இன்று தனது 73 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இவரது பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அமைச்சரவை உறுப்பினர்களான அமித்ஷா மற்றும் எஸ் ஜெய்சங்கர் உட்பட பல தலைவர்கள் அவர் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கூறி பதிவிட்டுள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், சேவா பக்வாடா திட்டம், பிரதமர் விஸ்வகர்மா கவுஷல் சம்மான் யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது .
unknown node