உலக தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், 87.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த பாகிஸ்தான் வீரர் ஷர்ஷத் நசீம் வெள்ளி வென்றுள்ளார்.
முன்னதாக, 2016- தெற்கு ஆசியா, 2017 – ஆசிய சாம்பியன்ஷிப், 2018 – காமன்வெல்த். 2018- ஆசியா, 2020 – ஒலிம்பிக், 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2022 – டைமண்ட் லீக், 2023 – உலக சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார் குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா தனது வெற்றி குறித்து பேசுகையில், நான் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் என் மீது அழுத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால், இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இது போன்ற பெரிய போட்டிகளில் (உலக சாம்பியன்ஷிப்) சிறப்பாக செயல்படும் பொறுப்பு எனக்கு அதிகம் உள்ளது.
ஒவ்வொரு முறையும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எனது வழக்கமான பயிற்சியுடன், நான் அடிக்கடி காட்சிப்படுத்தலில் ஈடுபடுகிறேன், இது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என பேட்டியளித்தார்.