நீட் தேர்வு :கடந்த மே-5ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) தேர்வு நடைபெற்றது. அதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி இருந்தனர். தற்போது, இந்த தேர்வுக்கான முடிவுகளை ஆன்லனில் தேசிய தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளைexams.nta.ac.in/NEET,neet.ntaonline.in,ntaresults.nic.in,nta.ac.inஆகிய இணையத்தளத்தில் தெரிந்து கொண்டு மதிப்பெண் அட்டயை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
NTA வெளியிட்ட தகவலின் படி, மொத்தம் 9,96,393 ஆண் தேர்வர்கள், 13,31,321 பெண் தேர்வர்கள் மற்றும் 17 திருநங்கை தேர்வர்கள் தேர்வெழுதியுள்ளனர். மொத்த வருகை 96.94 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதில், ஆண் தேர்வர்கள் 96.92 சதவீதம், பெண் தேர்வர்கள் 96.96 சதவீதம் மற்றும் திருநங்கை தேர்வர்கள் 94.44 சதவீதம் பங்கேற்றுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.