ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 7,718 கோடி ரூபாய் நிகர இழப்பு..!

வாராக்கடன் அதிகரித்ததால் நாட்டிலேயே மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4வது காலாண்டில் 7 ஆயிரத்து 718 கோடி

வாராக்கடன் அதிகரித்ததால் நாட்டிலேயே மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4வது காலாண்டில் 7 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய 4வது காலாண்டில் அந்த வங்கி 2815 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்த நிலையில், நிபுணர்கள் கணித்ததை காட்டிலும் மிகப் பெரிய நட்டத்தை சந்தித்துள்ளது.

வங்கியின் வாராக்கடன் 10.35 சதவீதத்தில் இருந்து 10.91 சதவீதமாக அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் 4வது காலாண்டில் வருமானம் 57 ஆயிரத்து 720 கோடி ரூபாயில் இருந்து 68 ஆயிரத்து 436 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.