டிவிட்டரில் "#ResignModi" என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்...! என்ன காரணம்...?

Netizens have been trending the hashtag #ResignModi on their Twitter page, calling for the resignation of Prime Minister Modi who could not control the spread of corona disease.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என, நெட்டிசன்கள் ட்வீட்டர் பக்கத்தில், #ResignModi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் சமீப நாட்களாக, கொரோனா வைரஸின் 2-வது அலை மிக தீவிரமாக கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்து, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஒருபக்கம் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக  கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,50,61,919 உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு 2-லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனையடுத்து, கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என, நெட்டிசன்கள் ட்வீட்டர் பக்கத்தில், #ResignModi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.