புதிய மதுக்கொள்கை விவகாரம் – தெலங்கானா முதல்வர் மகளின் ஆடிட்டர் கைது!

புதிய மதுக்கொள்கை விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவின் ஆடிட்டர் கைது.

புதிய மதுக்கொள்கை விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவின் ஆடிட்டர் கைது.

புதிய மதுக்கொள்கை – ஆடிட்டர் கைது:

டெல்லி அரசின் புதிய மதுக்கொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். திரும்ப பெறப்பட்ட புதிய மதுக்கொள்கை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், கவிதா ஆடிட்டர் புட்சி பாபு கொரண்டலாவை சிபிஐ போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

டெல்லியில் மதுபான கொள்கை:

கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி அரசானது புதிய மதுபான கொள்கையை கொண்டு வர முடிவு செய்து, தனியார் மதுபான கடைகளுக்கு அனுமதி, சலுகைகள் வழங்கியது. ஆனால் ஆம் ஆத்மி அரசின் இந்த கொள்கை முடிவில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று என்று சிபிஐ, அமலாக்கத்துறை குற்றச்சாட்டியுள்ளது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பல்வேறு நடவடிக்கைகள் அடுத்தடுத்து பாய்ந்தன.

புதிய மதுக்கொள்கை விவகாரத்தில் சவுத் குரூப்:

இதனால் ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு 2022 ஜூலையில் திரும்ப பெற்றது. புதிய மதுக்கொள்கை விவகாரத்தில் சவுத் குரூப் தொழிலதிபர்கள் குழுவில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதா எம்எல்சி, அக்கட்சியின் எம்பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி, உள்ளிட்டவர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

கவிதாவிடம் சிபிஐ விசாரணை:

மேலும் இந்த குழுவை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டது. சமீபத்தில் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், டெல்லி அரசின் புதிய மதுக்கொள்கை விவகாரத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.