புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்றம் ! இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

Today, Prime Minister Narendra Modi is laying the foundation stone for the new Parliament House.

டெல்லியில் உள்ள சன்சாத் மார்க்கில் புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு  இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்க்கான செலவு ரூ.971 கோடி எனவும் புதிய நாடாளுமன்றம் ஒரு முக்கோண வடிவத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளின் போது காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், இது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனி அலுவலகங்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களுக்கு அமரக்கூடிய வசதியும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்கள் அமரக்கூடிய வசதியும் இருக்கும். எதிர்காலத்தில் இரு வீடுகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை மனதில் கொண்டு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.