அடுத்த முதல்வர் பாஜகவிலிருந்து வருவார்.. மம்தா அரசு 2025ம் ஆண்டுக்குள் கவிழும் – அமித் ஷா

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு 2025ஆம் ஆண்டுக்குள் கவிழும் என அமித்ஷா பேச்சு.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு 2025ஆம் ஆண்டுக்குள் கவிழும் என அமித்ஷா பேச்சு.

மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஊரகத் தேர்தல்களுக்கு முன்னதாக கட்சியின் நிறுவன உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்மாநிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது, பீர்பூமில் நடந்த ‘ஜன் சம்பர்க் சமவேஷ்’ பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக சாடியதோடு, 2025க்கு முன் மம்தா தீதியின் அரசாங்கம் கவிழும் என்றார்.

மேற்கு வங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்க ஒரே வழி பாஜகதான். வங்காளத்தில் ஊடுருவலை தடுக்க ஒரே வழி பாஜகதான். 2024ல் எங்களுக்கு 35 இடங்களை கொடுங்கள் (மேற்கு வங்க தேர்தல்) 2025-க்கு தேவை இருக்காது. 2025க்கு முன் மம்தா தீதியின் அரசு கவிழும். மம்தா பானர்ஜி தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியை முதல்வராக ஆக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்.

ஆனால், அடுத்த முதல்வர் பாஜகவிலிருந்து வருவார். டிரெய்லரை 2024 (பொதுத் தேர்தல்) காட்ட வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன் வங்காளத்தில் ராம நவமி பேரணிகளைத் தாக்க யாரும் துணிய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2019 தேர்தலில், மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களை பாஜக வென்றது.