#Breaking: புதுச்சேரியில் நாளை முதல் "இரவு ஊரடங்கு"- துணைநிலை ஆளுநர் அதிரடி உத்தரவு!

As the spread of corona in Puducherry begins to increase, the Deputy Governor has ordered a night curfew in the state.

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கு விதித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதேசமயத்தில், கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தலைமை செயலர், சுகாதார செயலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், காலை 5 முதல் மாலை 5 வரை மட்டுமே கடற்கரை திறந்து இருக்கும் என்றும், உணவகங்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து உன்ன அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.