Nipah virus: நிபா வைரஸ் பரவல்..! மாஹேவில் வரும் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

கடந்த சில நாட்களாக கேரளாவில் மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிபா வைரஸால் கோழிக்கோட்டில் 2 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு அறிகுறி

Nipah virus Mahé

கடந்த சில நாட்களாக கேரளாவில் மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிபா வைரஸால் கோழிக்கோட்டில் 2 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு அறிகுறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. நிபா வைரஸ் பரவலை அடுத்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது.

தமிழகத்திலும் தீவிர காய்ச்சல் காரணமாக சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதால் தமிழகத்திலும் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவில் இதுவரை ஆறு பேருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இதனால் கோழிக்கூடு மாவட்டத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியான மாஹேவில் வரும் 24ம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.

கேரளாவில் நிஃபா வைரசால் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாடு – கேரளா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பூங்கா, கடற்கரை போன்றுவற்றையும் அரசு மூடியுள்ளது. பொது நிகழ்ச்சிகளுக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.