நித்யானந்தா ஆக்ரோஷம்.! குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் முட்டாள்கள்..!

- தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள் என்றும் தாமே மனிதத்தின் எதிர்காலம் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்.
- கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகளை போடப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என்று தேடி வருகிறார்கள். ஆனால் நித்தியானந்தா அவரது பேஸ்புக் பக்கத்தில் தினமும் அவரது சீடர்களுக்கு அறிவுரை வழங்கியும் தரிசனமும் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நித்தியானந்தா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தாம் ஒரு உண்மையான கைலாசத்தை தான் உருவாக்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஸ்ரீகைலாசா ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல எனவும் கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம் என்றும் அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றும் தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றும் தானே மனித குலத்தின் எதிர்காலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025