நாளை கரையை கடக்க உள்ள நிவர் புயல் ! தீவிரமாக கண்காணிக்க தலைமை செயலாளர்களுக்கு கடிதம்

The National Emergency Management Center has sent a letter asking it to closely monitor the situation as cyclone Nivar

நாளை நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால், நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அவசரநிலை கட்டுப்பாட்டு மையம் கடிதம் அனுப்பி உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இன்று காலை புயலாக வலுவடைந்தது.தற்போது நிவர் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகேநாளை பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அவசரநிலை கட்டுப்பாட்டு மையம் கடிதம் அனுப்பி உள்ளது. ஒடிசா,தெலுங்கானா,அந்தமான் &நிக்கோபார் தீவுகள்,மேற்கு வங்கம், தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாளை நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால், நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.