தற்போது முதல் தவணை பூஸ்டர் தடுப்பூசி போட வைப்பதில் தான் அரசு கவனம் செலுத்துவதாக தகவல்.
கொரோனா பாதிப்பை தடுக்க 2-ஆவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தற்போது போட வேண்டிய அவசியமில்லை என அரசு வட்டாரங்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் 22.4 கோடி பேர் தான் பூஸ்டர் போட்டு கொண்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது முதல் தவணை பூஸ்டர் தடுப்பூசி போட வைப்பதில் தான் அரசு கவனம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.