அமித்ஷாவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை..உள்துறை அமைச்சகம்.!

கடத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அமித்ஷா

கடத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அமித்ஷா சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா  பரிசோதனையில் தற்போது தொற்று இல்லை என முடிவு வந்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில்  இருந்து பதிவை நீக்கினார்.