யுபிஐக்கான பரிவர்த்தனை கட்டணம் செலுத்த தேவையில்லை என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள்பே, பேடிஎம் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை செய்வதற்கான கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று என்பிசிஐ தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது யுபிஐக்கான பரிவர்த்தனை கட்டணம் செலுத்த தேவையில்லை என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வெளியான தகவலின் படி, ஏப்ரல் 1 முதல் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) நெட்வொர்க் மூலம் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை 1.1% என நிர்ணயித்து என்பிசிஐ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த பரிமாற்ற கட்டணத்தினால் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பயனர்கள் ரூ.2,000க்கும் அதிகமான தொகையை யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்தால் மட்டுமே பரிமாற்றத்திற்கான கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் தேவையில்லை :
ஏப்ரல் 1 முதல் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று பேடிஎம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கிக் கணக்கு அல்லது பேடிஎம் வாலட்டில் இருந்து யுபிஐலிருந்து பணம் செலுத்துவதற்கு எந்த வாடிக்கையாளரும் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை :
மேலும் இந்த பரிமாற்றக் கட்டணங்கள் பிபிஐ (Prepaid Payment Instruments) வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்றும் வங்கிக் கணக்கு அடிப்படையிலான யுபிஐ கட்டணங்கள் ஆகியவற்றிற்கு எந்தக் கட்டணமும் இல்லை என்றும் என்பிசிஐ தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
unknown node