இன்று முதல் ஜனவரி 31 வரை பட்டாசு விற்க, வெடிக்க தடை...! எங்கு தெரியுமா?

The sale and exploding of firecrackers has been banned in Rajasthan from today till January 31 next year.

இராஜஸ்தானில் இன்று முதல் வருகின்ற ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதாவது, இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் பட்டாசுகளில் இருந்து வெளிவரக்கூடிய புகை காரணமாக அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் இந்த புகையால் மேலும் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனும் காரணத்தாலும் தான் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.