#BreakingNews :டெல்லி மட்டும் அல்ல , நாடு முழுவதும் தடுப்பூசி இலவசம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

Not just in Delhi, it will be free across the country: Union Health Minister Harsh Vardhan says today press meet

டெல்லி மட்டும் அல்ல ,நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

ஆகவே கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டெல்லியில் நடைபெற்று வரும் ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் அவர் பேசுகையில்,  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற்று வருகிறது.சோதனை முடிந்த பிறகு டெல்லி மட்டும் அல்ல ,நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.