மக்களவை உறுப்பினர் என்ற வகையில் ராகுல் காந்திக்கு அரசு இல்லம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், நோட்டீஸ்.
டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி துக்ளக் சாலை பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் ராகுல் காந்தி தற்போது வசித்து வரும் நிலையில், நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மோடி பெயர் குறித்த கருத்து தொடர்பான வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களை பல்வேறு இடங்களில் நடத்தி வருகின்றனர். இந்த சமயத்தில் அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.