பிரதமர் மோடி, அந்தமான் நிக்கோபாரின் 21 பெரிய தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர் சூட்டினார்.
நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான, பராக்ரம் திவாஸ் 2023 நிகழ்வில் பிரதமர் மோடி, அந்தமான் நிக்கோபாரில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை சூட்டினார். மேலும் நேதாஜியின், 126-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், அந்தமானில் நேதாஜியின் நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இது குறித்து பேசிய மோடி, இந்த அந்தமான் பூமியில் தான் முதன்முதலாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் முதல்முறையாக உருவாக்கப்பட்டது இங்குதான். இன்று நேதாஜியின் பிறந்தநாள், இந்த நாளை தான் பராக்கிரம் திவாஸ் என்று இந்தியா கொண்டாடுகிறது, இது ஒரு வரலாற்று நாள் என பிரதமர் மோடி அந்நிகழ்வில் கூறினார்.