பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றிய வழக்கில் ஒருவர் கைது.!

Published by
murugan

மத்திய பிரதேசத்தில் ஃபாரூக் கான் என்பவரின் வீட்டில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஷிப்ரா கிராமத்தில் வசிக்கும் ஃபாரூக் கான் வீட்டின் மேல் நமது அண்டை நாட்டின் கொடியை ஏற்றி இருப்பதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இப்பகுதியில் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் லகன் சிங்கை அந்த இடத்திற்குச் சென்று உண்மையில் பாகிஸ்தான் கொடி இருக்கிறதா..? என்றுஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

வருவாய் ஆய்வாளர் லகான் சிங் கூறுகையில், வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னர், இது குறித்து விசாரிக்க சென்றபோது, தன்னுடைய  12 வயது  மகன் தெரியாமல் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றியதாகவும் , அதைப் பற்றி அறிந்ததும் அவர் கொடியை அவிழ்த்துவிட்டதாகவும் கூறினார்.

கான்ஸ் இல்லத்தில் இருந்து பாகிஸ்தான் கொடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், எங்கிருந்து கொடி கிடைத்தது என்பது குறித்து அவர்  பதிலளிக்கவில்லை என லகான் சிங் கூறினார். இது குறித்து வருவாய் ஆய்வாளர் லகான் சிங்  காவல்துறையிடம்  புகார் அளித்தார். புகாரின் பேரில் ஃபாரூக் கான் நேற்று மாலை ஐபிசி பிரிவு 153 ஏ கீழ் கைது செய்யப்பட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago