மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்.!

சபரிமலை ஐயப்பனின் மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடநக்கியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல விளக்கு பூஜையினையொட்டி நவம்பர் 15 ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின் டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மண்டல விளக்கு பூஜைக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களையும் அதன்பின், வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்து 500 பக்தர்களையும் அனுமதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பூஜையில் கலந்து கொள்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தனிநபராகவோ அல்லது குழுவாகவோ இன்று தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025