குடியரசுத் தலைவரை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு!

மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவரை சந்திக்க 'இந்தியா' கூட்டணி நேரம் கேட்டு கடிதம்.

INDIA MEETING

மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவரை சந்திக்க ‘இந்தியா’ கூட்டணி நேரம் கேட்டு கடிதம்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவரை சந்திக்க ‘இந்தியா’ கூட்டணி நேரம் கேட்டு கடிதம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் கொடூரத்தை தொடர்ந்து, நிலைமையை ஆய்வு செய்ய I.N.D.I.A கூட்டணி நேரில் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, I.N.D.I.A கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் நாளை மறுநாள் (ஜூலை22) மணிப்பூர் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.