1963ல் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பிறந்து 1967ல் தமிழக திரைப்பட துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பல நூற்றுக்கணக்கான பல்வேறு மொழிபடங்களில் நடித்து,சிறந்த நடிகை என்று பல விருதுகளை பெற்ற பத்மஸ்ரீ ,ஸ்ரீதேவி அவர்கள் துபாயில் மாரடைப்பால் நேற்று காலம்மானார். தமிழக மக்களின் மனதில் அழகிய மயிலாக 16 வயதினிலே படத்தில் வலம் வந்த அந்த அழகிய மயில் ,இன்று இந்த உலகை விட்டு பறந்திருக்கிறது.
unknown nodeபத்மஸ்ரீ ஸ்ரீதேவியின் மரணத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,பிரதமர் மோடி,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,உலகநாயகன் கமல்ஹாசன்,நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
unknown nodeஅவரை பிரிந்து வாடுகின்ற குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும்,எங்களது உள்ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
unknown node