இந்தியாவில் இது வரை 23,28,779 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Over 23 lakh healthcare workers vaccinated so far across country, health ministry says

இந்தியாவில் இது வரை 23,28,779 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 12-வது நாளான நேற்று 28 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.அதாவது,கொரோனா தடுப்பு மருந்தை இது வரை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது.

41,599 முகாம்களில் 23,28,779 சுகாதார பணியாளர்களுக்கு நேற்று மாலை 6 மணி வரை வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை 6 மணி வரை 5,308 முகாம்கள் நடைபெற்றது.12 -ஆம் நாளான நேற்று நாடு முழுவதும் 2,99,299 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்நாட்டில் 4,316 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பு மருந்தின் காரணமாக இது வரை எந்தவிதமான தீவிர பாதிப்பு/உபாதைகள்/இறப்பு ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.