மும்பையில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 30-க்கு மேற்பட்டோர் காயம்:4பேர் பலி !!!

This news gives information about Over 30 people have been injured in the collapse of Mumbai: Four dead-mumbaiil mempalam

சாலைக்கு மேல் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வகையில் இருந்த பாலம்  இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில்  சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலம் நேற்று  மாலை இடிந்து விழுந்தது. சாலைக்கு மேல் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வகையில் இருந்த நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது. அதில் சென்று கொண்டிருந்த பயணிகள் விழுந்தனர். மேம்பாலம் விழுந்ததில் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது.

உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் இடிபாடுகளுக்கு சிக்கியவர்களை மீட்டனர்.  மேலும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்தனர்.

உடனடியாக காயம் அடைந்தவர்களை  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மேம்பாலம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பாலத்தில் காலையில் பயணிகளை அனுமதி படி பராமரிப்பு பணிகள் நடைபெற்று உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.