"ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்"- டெல்லி அரசு வலியுறுத்தல்!

Delhi Chief Minister Arvind Kejriwal has demanded that all oxygen factories in the country be handed over to the army.

நாட்டில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஓப்படைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் டெல்லியில் நாள் ஒன்றுக்கு 25,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதாகவும், ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நாட்டில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஓப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜன் வாகனங்களை பல மாநிலங்களில் தடுத்து நிறுத்தியதால், அதற்கு தீர்வு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.