பத்மஸ்ரீ விருது பெற்றவரும் முன்னாள் ஐ.எம்.ஏ தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்.
பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் காரணமாக டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,உடல்நிலை மிகவும் மோசமானதால் டாக்டர் கே.கே.அகர்வாலுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் டாக்டர் கே.கே.அகர்வால் உயிரிழந்தார்.
இதுகுறித்து,டாக்டர் கே.கே.அகர்வாலின் குடும்பத்தினர்,அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,”தொற்றுநோய்களின் போது கூட, டாக்டர்.கே.கே.அகர்வால் மக்களை காப்பாற்றுவதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார் மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஏராளமான வீடியோக்களை பதிவிட்டார்,அந்த வீடியோ 100 மில்லியன் மக்களை சென்றடைந்தது.அதன் மூலம்,எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றினார்.அவர் தனது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார்.ஆனால்,தான் இறப்பது குறித்து துக்கப்படவில்லை”,என்று தெரிவித்தனர்.
unknown node